முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பார்லி.,யில் அதிமுக வலியறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் உள்பட 38 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாராளுமன்றத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
போதை பொருள் கடத்தியாதாக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் தூக்கதண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியது நினைவிருக்கலாம். இவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு அதற்கு மறுநாளே 14 தமிழக மீனவர்களை தனது கடற்படை மூலம் பிடித்து சென்றது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 24 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து 38 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த பிரச்சனை நேற்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. 38 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கமாறு அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மணலி தொழிற்சாலைகளில் எரிவாயு இணைப்பு கிடைக்கும் வரை நாப்தாவுக்கான மாணியத்தை தொடர்ந்து வழங்கவேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு பதியளித்து பேசிய மத்திய அமைச்சர் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து