முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா கட்சியில் சேரவில்லை: நடிகை குஷ்பு

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - நாடாளுமன்றத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகினார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார். இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தந்த நெருக்கடியால் அவர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது... இதையடுத்து தி.மு.க.வில் இருந்து விலகினார்.குஷ்புவை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜனதாவில் அவர் இணையப் போவதாகவும் கூறப்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு இன்டர்நெட்டிலும் இச்செய்தி வலுவாக பரவியது. குஷ்பு பா.ஜனதாவில் சேர்வது உறுதி என்று கூறப்பட்டது.இதனை டுவிட்டரில் குஷ்பு மறுத்துள்ளார். பா.ஜனதாவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து