முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை பணிகள்: கட்காரியுடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை – சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தமது துறை ரீதியான வளர்ச்சிப்பணிகள் பற்றி விவாதித்தார்.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்காக பிரதமர் நரேந்திரமோடியின் நடவடிக்கைகளுக்கு துணை நின்ற வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களின் படகுகளையும் அண்மையில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தமது துறை ரீதியான வளர்ச்சிப்பணிகள் பற்றி விவாதித்தார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பயிருப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து