முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற முதல்வரிடம் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி பாண்டியாறு- புன்னம் புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை சந்தித்த விவசாயிகள் சங்கத்தலைவர் நல்லசாமி வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனுவொன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவாலா காடுகளில் உற்பத்தியாகி றது பாண்டியாறு -புன்னம்புழா. இது மேற்கு நோக்கி சென்று கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கள்ளிக்கோட்டைக்கு அருகில் கடலில் பயன்பாடு இல்லாமல் கலந்து வருகிறது.1967 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கேரள அரசுடன் தமிழக அரசு சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் - கேரளத்திற்கு மின்சாரம் என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு 18 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் .பவானி பாசனங்களுக்கு இருந்து வரும் நீர்ப்பற்றாக்குறையும் நீங்கும். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றவும் இது ஏதுவாக இருக்கும் .
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து