முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அதிமுக நிர்வாகியின் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - சாலை விபத்தில் மரணமடைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் எஸ். தண்டபாணியின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளரும்,மக்களின் முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
திண்டுக்கல் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எஸ். தண்டபாணி சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழக உடன்பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த போதிலும், இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று என் உயிரினும் மேலான விலை மதிக்க முடியாத எனது அருமை கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பது மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது. அன்பு சகோதரர் தண்டபாணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து