முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தியாளர்கள் மீதான போலீஸ் தாக்குதல்: வழக்கை விசாரிக்க ஒப்புதல்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அரியானா சாமியார் ராம்பால் ஆசிரமத்தின் முன்னர் செய்தி சேகரிக்க காத்திருந்த செய்தியாளர்கள் மீது அம்மாநில போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சாமியா ராம்பால் கைது செய்யப்படும் முன்னர் அங்கு நடந்த கலவரங்கள் தொடர்பான செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு சிலர் படுகாயமடைந்தனர். கேமரா போன்ற உபகரணங்கள் சேதமடைந்தன.
படுகாயமடைந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், மனுதாரர் சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாக கூறினார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து