முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்துகள் விலை உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - மத்திய அரசின் தவறான கொள்கைகளால், எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியனவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பி.ராஜீவ் எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது: "எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியனவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்நோய்களால் அவதிப்படும் சாமான்ய மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தவறான மருந்து கொள்கைகளை வகுத்திருப்பதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
சாமான்ய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் இந்த கொள்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து