முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஐ இயக்குநர் நியமன சட்டத் திருத்த மசோதா தாக்கல்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதைய நடைமுறைப்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர், சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இடம்பெற வழிவகுக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்தது. தற்போதைய மக்களவையில் எந்த கட்சிக்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. இதனால், சிபிஐ இயக்குநர் தேர்வில் எதிர்க்கட்சி யின் பங்களிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எதிர்க் கட்சியின் தலைவர் என்பதற்கு பதிலாக, இருப்பதிலேயே அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள எதிர்க்கட்சியின் தலைவரை சிபிஐ இயக்குநர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
சிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பான டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குழுவில் உள்ள உறுப்பினர் பதவியிடங்களில் ஏதாவது ஒன்று காலியாக இருந்தாலோ, தேர்வுக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர் யாராவது பங்கேற்காமல் இருந்தாலோ, அந்நிலையில் தேர்வு செய்யப்படும் சிபிஐ இயக்குநரின் நியமனம் சரியானதுதான் என்ற வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து