முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் 3 அணைகள், 22 தடுப்பணைகள்: கர்நாடகம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 3 புதிய அணைகள் மற்றும் 22 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் 48 டிஎம்சி நீர் தேக்கப்பட்டு, கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் நீர்மின் நிலைய‌ம் அமைக்கப்படும் என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகள் கட்டி 48 டிஎம்சி நீரை தேக்க முடிவு செய்திருப்பதாக கர்நாடகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசு சார்பாக,கர்நாடக அரசின் இந்த திட்டத்தை நிறுத்தக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரு, மைசூரு, பழைய மைசூரு ஆகிய நகரங்களின் குடிநீர் மற்றும் மின்சார‌ தேவைக்காக 48 டிஎம்சி கொள்ளளவில் மேகதாதுவில் 2 அணைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக‌ 2,500 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியை கையகப்படுத்தினால், வன உயிர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் புதிய அணைக் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட காவிரி மேம்பாட்டு கழக அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.அதன்படி மேகேதாட்டு திட்டம் வேறு வடிவில் நிறைவேற்றப்படும்.
48 டிஎம்சி கொள்ள‌ளவு கொண்ட அணையை ஒரே இடத்தில் கட்ட முடியாததால், மேகதாதுவில் 3 இடங்களில் 3 புதிய அணைகள் கட்டப்படும். இதில் 10 முதல் 20 டிஎம்சி அளவு நீரை தேக்க முடியும். அதனைத் தொடர்ந்து 22 இடங்களில் 5 டிஎம்சி வரையிலான கொள்ளளவு கொண்ட தடுப்பணைகள் கட்டப்படும். இதன் மூலம் 48 டிஎம்சி நீரை தேக்க முடியும். இதன்படி சிம்ஷா ஆறு, திப்பகொண்டனஹள்ளி, மஞ்சனபளே, கன்வா உள்ளிட்ட இடங்களில் அணைகள் கட்டப்படும்.
தற்போது திட்டமிட்டப்பட்டுள்ள இடங்களில் புதிய‌ அணைகள் கட்டுவதன் மூலம் வனமும் வன உயிர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படாது. எனவே, மத்திய, மாநில வனத்துறை இந்த திட்டத்தை எதிர்க்க வாய்ப்பில்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் திட்டம் தொடங்கும்.
இந்த புதிய திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு வரும் டிசம்பர் 31 இறுதித் தேதி யாகும். இதுவரை அமெ ரிக்கா, ரஷ்யா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் கோரியுள்ளன. காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டு கழக அதிகாரிகளும் நீர்வள‌த்துறை அதிகாரிகளும் திட்ட வரைவுப் பணிகள் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.
மேகதாது கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு சம்மன் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து