முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஐ இயக்குனருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய பிரசாந்த் பூஷண் மனு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - 2 ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகவும், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களி்ன் ஏஜண்டுகள் அல்லது வழக்கறிஞர்களை தனது வீட்டில் தொடர்ந்து ரஞ்சித் சின்ஹா சந்தித்தது ஏற்கனவே தெரியவந்துள்ளது. 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் முயற்சியில் ரஞ்சித் சின்ஹா ஈடுபட்டதும், சிபிஐ இயக்குனர் என்ற தனது அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்ததற்கும் போதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் சந்தித்து பேசியதாக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து விலகியிருக்கும் படி ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து