முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனை குறித்த தீர்மானம்: இந்தியா எதிர்த்து வாக்களி்ப்பு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியுயார்க் - மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச்சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது.
தங்கள் சட்டங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்த தீர்மானம் பு றக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது.
சமூக, மனிதாபிமான, கலாச்சார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நாவின் மூன்றாவது குழு குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
15 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், மனநலன் அல்லது அறிவுத்திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 3 6 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதுக்குழுவின் முதன்மை செயலர் மயங்க் ஜோஷி அளித்த விளக்கத்தில், மரண த ண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே அந்த தீ ர்மானம் கொண்டு வரப்பட்டது. அது இந்தியாவின் சட்ட கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சட்ட திட்டங்களை வகுப்பதற்கும், குற்றவாளிகளை அந்த சட்டப்படி தண்டிப்பதற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உ ள்ளது. அந்த உ ரிமை இந்த தீர்மானத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நியாயமான விசாரணைக்கும் மேல் முறையீட்டுக்கும் வழிவகை உள்ளது. ஏற்கனவே கர்ப்பிணிகளுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்காகவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மரண தண்டனைக்கு தடை விதித்தும் இந்தியா சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. இந்திய சட்டப்படி 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. உ ச்சநீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றார் மயங்க் ஜோஷி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து