முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்யானந்தா ஆன்மை பரிசோதனை அறிக்கை தாக்கல்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

பெங்களூரு - நித்யானந்தாவின் ஆன்மை பரிசோதனை மருத்துவ அறிக்கையை கர்நாடக சிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
நித்யானந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு ஆன்மை இல்லை என்று கூறியிருந்தார். அதை மறுத்த பிடதி போலீசார் நித்யானாந்தாவுக்கு ஆன்மை பரிசோதனையும், ரத்த பரிசோதனையும் நடத்த அனுமதி கோரி ராம்நகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அம்மனு கடந்த ஆகஸ்ட் 1 6ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆன்மை பரிசோதனை செய்யலாம். அதற்கு நித்யானந்தா ஒத்துழைப்பு தர வேண்டும். ஒத்து ழைப்பு கொடுக்க மறுத்தால் கைது செய்து பரிசோதிக்கலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து கடந்த செப்டம்பர் 8ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பெங்களூரு மடிவாளாவில் மரபணு பரிசோதனை மையத்தில் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இரண்டரை மாத ஆய்வுக்கு பின் 31 பக்கங்கள் கொண்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை சிஐடி போலீசாரிடம் டாக்டர்கள் அளித்தனர். இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் புகார் வழக்கு நேற்று ராம்நகரம் மாவட்ட செசன்ஸ் 1வது நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா உட்பட அவரது சீடர்கள் நேரில் ஆஜராகினர். அப்போது கர்நாடக சிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ் குமார் நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆன்மை பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து