முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பண உண்மை விவரம் யாருக்கும் தெரியாது: ரிசர்வ் வங்கி கவர்னர்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

அகமதாபாத் - வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்போம் என பாஜக தனது லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தது. இதனையடுத்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தின் போது கருப்பு பணத்தை மீட்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த விவாகரம் தொடர்பாக நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தின் மொத்த மதிப்பு மிக சரியாக எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் நம்மை பொறுத்தவரையில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் ப ணத்தை முதலீடு செய்வதை எப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். க ருப்பு பணத்தை பதுக்கி வைப்பதற்கான காரணங்களை நாம் கண்டறிந்து தடுக்க வேண்டும். அப்போதுதான் சட்டவிரோதமாக பணம் பதுக்குவது கடினமான காரியமாகும். கருப்பு பணத்தை பதுக்குவதை தடுப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. நாம் நமது வங்கி நடைமுறைகளை இன்னும் மேம்படுத்த தேவை உள்ளது. பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு முறையை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து