முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி பிரணாப் எழுதிய புத்தகம் 11ம் தேதி வெளியீடு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காங்கிரசில் தீவிர பற்று உடையவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் 1969–ம் ஆண்டு டெல்லி மேல்– சபை எம்.பி.யாகி தேசிய அரசியலில் ஈடுபட்டார். 1973–74–ம் ஆண்டு இந்திரா மந்திரி சபையில் துணை மந்திரியாக இருந்தார். இந்தியா–பாகிஸ்தான் போர் அதன்பிறகு அவசர நிலை பிரகடனம், பாராளுமன்ற தேர்தலில் இந்திராவுக்கு தோல்வி, எம்.பி. பதவி ரத்து என அடுக்கடுக்கான பல அரசியல் திருப்பங்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டன. அப்போது இந்திரா காந்திக்கு பக்க பலமாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா சுட்டுக்கொல்லப்பட்டதும் 2–வது இடத்தில் இருந்த பிரணாப்முகர்ஜிதான் பிரதமர் ஆகக்கூடியவர் என பேசப்பட்டது. ஆனால் திடீர் என்று ராஜீவ்காந்தி பிரதமர் ஆக்கப்பட்டார்.
தொடர்ந்து ராஜீவ்காந்தி, நரசிம்மராவ்,மன்மோகன்சிங் மந்திரி சபையில் முக்கிய பொறுப்புகள் வகித்து கடைசியாக நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புக்கு வந்தார். காங்கிரசில் உள்ள மற்ற தலைவர்களைப் போல் அல்லாமல் பிரணாப் முகர்ஜி அனைவராலும் நன்கு மதிக்கப்படக்கூடியவர். எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர்.
ஜனாதிபதியாக இருக்கும் அவர் தற்போது புத்தகம் எழுதியுள்ளார். ‘டிரமடிக் டெகேடு’ (வியத்தகு சதாப்தம்) என்று புத்தகத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தில் தனது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் தொடங்கி 3 பிரிவுகளாக எழுதியுள்ளார். முதல் பிரிவில் இந்திரா ஆட்சியால் ஏற்பட்ட அரசியல் திருப்பங்களை குறிப்பிட்டுள்ளார். அடுத்து 1981–88–ம் ஆண்டு வரை நடந்த சம்பவங்கள் 2–வது பிரிவாகவும், 1988–2012–ம் ஆண்டுகள் வரையிலான சம்பவங்களை 3–வது பிரிவாகவும் எழுதியுள்ளார்.
வருகிற டிசம்பர் மாதம் 11–ந்தேதி இந்த புத்தகம் வெளியாக உள்ளது. பிரணாப்முகர்ஜியின் இந்த புத்தகத்தில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்று இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட நட்வர்சிங் உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைமையின் மீது குற்றம் சாட்டி இருந்தனர். இதனால் அவர்களது புத்தகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல் பிரணாப் முகர்ஜியின் புத்தகமும் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து