முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயக்கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்க உத்தரவு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - காவிரி பாசன பகுதிகளில் வேளாண் பருவக்காலம் தொடங்கிய நிலையில்,விவசாயிகளுக்குதேவையான கடன் உதவிகளை உடனுக்குடன் எளிதாக வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
, மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சட்டமன்றப் பேரவையில் 2014-15 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறையின்கொள்கை விளக்கக்குறிப்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்மீதான முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மார்ச் 2015க்குள்கூட்டுறவுத்துறையின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு வகையான கடன்கள் உள்ளிட்ட அனைத்துவகையான குறியீடுகளையும் எய்திடவும், பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவினியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல் வழங்கி உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.
டெல்டா மாவட்டங்களில் வேளாண் பருவகாலம் தொடங்கிவிட்ட நிலையில்,விவசாயிகளுக்குதேவையான கடன் உதவிகளை உடனுக்குடன் எளிதாக வழங்கவும், உரம், விதை மற்றும் பூச்சிக்கொல்லிமருந்துகள் போன்ற இடுபொருட்களை வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், இதர கடன்உதவிகளை தாமதமின்றி வழங்கவும், முன்னுரிமை அளித்து செயல்படுமாறு அறிவுறுத்தினார்.2014-15 ஆம் ஆண்டில் ரூ. 5000 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில்இதுவரை 6,60,682 பயனாளிகளுக்கு ரூ. 3,377.78 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் வரை 1,63,254 மெ.டன் அளவிற்கு யூரியா விநியோகம் செய்யப்பட்டது.அதுவே, நடப்பாண்டில் இதுவரை 1,95,047 மெ.டன் யூரியா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும்மாதங்களுக்கு தேவையான உரங்கள் கொள்முதல் செய்ய தக்க முன் ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து,அதில் எவ்வித குறைபாடுகளுக்கும் இடம் தராமல் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்கஅதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு\பகுதியாக 57 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் நுகர்வோர் நியாயமான விலையில் காய்கறிகளை வாங்கவும், விவசாயிகளுக்கும்விளைபொருட்களை விற்க உத்தரவாதமான சந்தையும் கிடைக்கிறது. இத்திட்டத்தை மாவட்டந்தோறும்விரிவுபடுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனைதெரிவித்தார்.பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில்ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 210 கூட்டுறவு மருந்தகங்களுடன் நடப்பாண்டில் புதிதாக 100 அம்மாமருந்தகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு தற்போது 36 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. அம்மா மருந்தகங்களின் முழு பயன்களும் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்யவேண்டும்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படையும் வகையில் அவர்களுக்கு அரசின் திட்டங்கள்அனைத்தும் உடனடியாக தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில் சீரிய முறையில் செயல்படுத்திஅனைவரும் பயன்பெற முழு ஈடுபாட்டுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இரா.கிர்லோஷ் குமார்,, கூட்டுறவுச்சங்கங்களின்கூடுதல்பதிவாளர்கள்கே.ராஜேந்திரன்,இரா.கார்த்திகேயன்,.எம்.பி.சிவன்அருள்,இராம. ஜெயம்பாண்டியன்,கா.பிரமிளா,.க.மா.வெள்ளியங்கிரி,கே.ஜெகன்நாதன், டாக்டர் என்.வில்வசேகரன், பா.பாலமுருகன், ஆர்.பிருந்தா, ம.அந்தோனிசாமி ஜான் பீட்டர் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து