முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட்டு, ஜார்ஜ் டவுன் கோர்ட்டு கட்டிடங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - புராதன கட்டிடமான ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுகள், அரசு சட்டக்கல்லூரி, ஜார்ஜ் டவுன் கோர்ட்டு ஆகியவற்றை பராமரிக்கவும், பழுதை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக புராதன கட்டிட வாரத்தை கொண்டாடும் விதமாக, சென்னை ஐகோர்ட்டின் புராதன கட்டிட கமிட்டியின் தலைவரும், ஐகோர்ட்டு மூத்த நீதிபதியுமான ஆர்.சுதாகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், புராதன கட்டிடமான ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறு வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டுகள், அரசு சட்டக்கல்லூரி, ஜார்ஜ் டவுன் கோர்ட்டு ஆகியவற்றை பராமரிக்கவும், பழுதை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பராமரிப்பு பணியில், இந்திய தொல்லியல் துறை நிபுணர்கள் மற்றும் புராதன கட்டிடங்களை பராமரிக்கும் நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பணிக்காக ரூ.17 கோடியை தமிழக அரசு ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பணி ஒரு மாதத்துக்குள் செய்து முடிக்கப்படும். இந்த புராதன கட்டிடங்கள் பராமரிப்பு பணியில், பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து