முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: ஜன-20 நேரில் ஆஜராக ராமதாசுக்கு சம்மன்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை – ஜனவரி 20–ந்தேதி நேரில் ஆஜராகும்படி ராமதாசுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பிஉள்ளது.சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த 17–ந்தேதி மாலை பத்திரிகையில் ஒன்றில் வெளியாகியுள்ளது. பருப்பு கொள்முதலில் ரூ.7.30 கோடி அரசுக்கு இழப்பு என்ற தலைமையில் வெளியான அந்த செய்தியினால், பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறு அறிக்கை வெளியிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.மாலதி (பொறுப்பு) முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் ஆவணங்களை பெற்றுக் கொள்ள வருகிற ஜனவரி 20–ந்தேதி நேரில் ஆஜராகும்படி டாக்டர் ராமதாசுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து