முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவை காய்ச்சல் குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, – தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் இல்லை என்றும்,
கேரளத்திலிருந்து வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கிடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும். என்றும், முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆய்வுக் கூட் ட த்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் சுமார் 17000 வாத்துகள் இறந்துள்ளன. இந்த வாத்துகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இவை பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு இறந்துள்ளன என்பதை மத்திய அரசு உறுதி செய்து 25.11.2014 அன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், இந்நோய் தமிழகத்திற்கு பரவி விடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் .ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்,., தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன்,., கே. ராமானுஜம், , கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க. குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:-

1. நமது மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் எதுவும் இல்லை என்றாலும், இந்நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கிடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும்.

2. கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்படும் முட்டைகள், குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், கோழியினங்கள், கோழி இறைச்சி மற்றும் அவற்றின் எரு உள்ளடக்கிய கோழியினப் பொருட்கள் கேரள தமிழ்நாடு மாநில எல்லைகளில் நிறுத்தி திருப்பி அனுப்ப கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், போக்குவரத்து ஆணையர் மற்றும் வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பர். கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவர்.

3. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்கள் மீது தெளிப்பான் மூலம் கிரிமிநாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் இது செயல்படுத்தப்படும். மண்டல இணை இயக்குநர்கள் சோதனைச் சாவடிகளில் இப்பணிக்கானக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருப்பர். இதற்கு தேவையான தெளிப்பான் மற்றும் கிருமி நாசினிகள் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவில் போதுமான அளவு இருப்பில் உள்ளது. இப்பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்குவர். ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து தேவையான பணியாளர்கள் இதற்கென அனுப்பப்படுவர்.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

5. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்களின் செயல்பாட்டுக்கு தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்கள் (ஞநசளடியேட ஞசடிவநஉவiஎந நுளூரiயீஅநவே) தயார் நிலையில் வைக்கப்படும்.

6. தடுப்பு நடவடிக்கைப் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், தெளிப்பான்கள் மற்றும் கிருமி நாசினிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இவை கூடுதலாக தேவைப்பட்டால், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அவற்றை வழங்கும்.

7. சைதாப்பேட்டை மத்திய நோய் ஆய்வுக் கூடத்தில் (ஊசுடு) 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது. இதன் தொலைபேசி எண். 044 24339097; அலைபேசி எண். 9445032504.

8. கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கோழிச் சந்தைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

9. கோழி இனங்களின் உடல்நிலை குறித்த விவரம் நாள்தோறும் பெறப்பட்டு கண்காணிக்கப்படும்.

10. கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் குஞ்சு பொறிப்பதற்கான வாத்து மற்றும் கோழிமுட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதன் விபரம் சேகரிக்கப்பட்டு, அவற்றை முழுவதுமாக அழித்துப் புதைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

11. இடம் பெயரும் பறவைகளின் நடமாட்டத்தை பறவைகள் சரணாலயங்களில் தலைமை வனப் பாதுகாவலர் கண்காணிப்பார்.

12. கேரள மாநிலத்தில் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை கோழி மற்றும் கோழியினங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்படுவதை நிறுத்தும்படியும், தமிழ்நாட்டிற்குள் வரும் ரயில்களில் போதுமான அளவு கிருமிநாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறும் தென்னக இரயில்வே கேட்டுக் கொள்ளப்படும்.

கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமலிருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து