முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலா பலி 5,689 ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

நியூயார்க் - எபோலா நோய் பாதிப்பு காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 5,698-ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் டிசம்பர் 2013-ல் முதலில் ஏற்பட்ட இந்த தொற்று பின்னர் லைபீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளிலும் பரவியது. லைபீரிய நாட்டில்தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குமட்டும் பலியானவர்கள் எண்ணிக்கை 3,016 ஆகும். சியாரா லியோனில் 1,398 பேர் எபோலாவுக்கு பலியாகியுள்ளனர். கினியாவில் 1,260 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக அளவு மரணங்களால், ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த நோய்க்கு இதுவரை 5,698 பேர் பலியானதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
நைஜீரியா, செனகல் நாடுகள் எபோலாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. நைஜீரியாவில் 8 பேரும், செனகலில் ஒருவரும் எபோலாவுக்கு பலியாகினர். அதன்பின்னர், இவ்விரு நாடுகளிலும் புதிய தொற்று ஏற்படவில்லை. எனவே இவ்விரு நாடுகளும் அபாயப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து