முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: விசாரணை ஆவணங்கள் தாக்கல்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு தாக்கல் செய்தது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை சிபிஐ ஆகஸ்ட் 28, 2014-ல் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
கடந்த 25-ம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில், அத்துறை சார்ந்த முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா?
இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சிபிஐ கருதாதது ஏன்? இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என சிபிஐ ஏன் உணரவில்லை?
முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா?" என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர். அதுதவிர, ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணைக் குறிப்பை சீலிடப்பட்ட உறையில் போட்டு நீதிமன்றத்த்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஹிண்டால்கோ நிறுவன வழக்கின் விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட உறையில் வைத்து சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு தாக்கல் செய்தது.
இந்நிலையில் வழக்கை முடித்து கொள்ளும் சிபிஐயின் முடிவு மீதான விசாரணை டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து