முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக போபால் மக்கள் மனு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

நியூயார்க் - போபால் விஷ வாயு விபத்துக்கு காரணமாக இருந்த அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
1984ம் ஆண்டு போபாலில் உள்ள அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்திய கிளையில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த விபத்தை தொடர்ந்து இன்றும் அங்குள்ள நீர்வளங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த விபத்துக்கு அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் தர வேண்டும் என்று கூறி அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் அமெரிக்காவின் கீழமை நீதிமன்றம் ஒன்று, இந்தியாவில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்துக்கு அமெரிக்க நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் யூனியன் கார்பைடு நிறுவனம் கட்டப்பட்டு வந்த சமயத்தில் அந்த பணிகளை மேற்பார்வையிட்டு வந்த மேலாளர் லூகாஸ் ஜான் கூவராஸ், தான் அமெரிக்க நிறுவனத்திடம் பணியாற்றியதாகவும், இந்திய நிறுவனத்துக்காக பணியாற்றவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் இந்திய நிறுவனத்தில் நடந்து வந்த தயாரிப்பு நடவடிக்கைகளுக்கும், கழிவு பொருள் வெளியேற்றத்துக்கும் அதனால் ஏற்பட்டு வரும் மாசுபாடுகளுக்கும் அமெரிக்க நிறுவனம் நேரடியாக பொறுப்பாகிறது என்பது தெரியவருகிறது என்று போபால் மக்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மேலாளரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு போபால் மக்களின் சார்பாக எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் எனும் தொண்டு நிறுவனம் அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து