முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் உறைபனியில் சிக்கிய விமானத்தை தள்ளிய பயணிகள்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மாஸ்கோ - சைபீரியாவில் இயங்கி வரும் யுதெய்ர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான கடேகவியா எனும் விமானம் 74 பயணிகளுடன் இகார்கா என்ற இடத்தில் இருந்து க்ரஸ்னோயார்ஸ்க் என்ற சைபீரிய நகரம் வரை பறந்து வந்தது. தற்போது ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அங்கு தட்பவெப்பம் மைனஸ் 52 டிகிரியாக உள்ளது. அதனால் இகார்கா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் அடிப்பாகம் பனியால் உறைந்து விட்டது. இதன் காரணமாக ஓடுபாதையில் விமானம் நகர முடியவில்லை. எனவே அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விமானத்தை தள்ள முடிவு செய்தனர். அவர்கள் குறிப்பிட்ட தூ ரம் வரை விமானத்தை தள்ளி சென்றனர். பின்னர் விமானம் இயங்க தொடங்கியது.
விமானத்தை பயணிகள் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சியை பயணி ஒருவர் வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் பதிவேற்றினார். அதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபீரியாவில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் விளாடிமிர் அர்திமென்கோ கூறும் போது, இந்த விமானம் 2 4 மணி நேரமாக விமான நிலையத்தில் நின்றிருந்தது. விமானத்தின் பார்க்கிங் ப்ரேக்கை விமானிகள் எடுக்க மறந்து விட்டனர். இதனால் விமானத்தின் அடிப்பாகம் பனியால் உறைந்து விட்டது என்றார்.
விமானத்தை பயணிகள் தள்ளும் வீடியோ காட்சியை பார்த்த மக்கள் அந்த பயணிகளின் கூட்டு முயற்சியை கண்டு பாராட்டு தெரிவிக்கிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் விமானத்தை தள்ளுவது எல்லாம் சைபீரியர்களுக்கு கேக் சாப்பிடுவது போல என பத்திரிகைகள் புகழாரம் சூட்டுகின்றன. கடந்த 2012ம் ஆண்டு இதே விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் இறக்கைகளில் படிந்திருந்த பனிக்கட்டிகளை அகற்றாமல் விட்டதால் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து