முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவைக் காய்ச்சலால் பீதியடையத் தேவையில்லை: சாண்டி

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அந்த வைரஸ் பறவைகளை மட்டுமே பாதிக்கும், மனிதர்களைப் பாதிக்காது என கண்டறியப்பட்டுள்ளதால் பீதியடையத் தேவையில்லை என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர வைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளின்படி, சாத்திய முள்ள அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. போதுமான தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. கூடுதலாக மத்திய அரசிடமிருந்து தருவிக்கப்படு கின்றன. இதில் சிறு கவனக்குறை வுக்கும் வாய்ப்பளிக்க விரும்ப வில்லை. வாத்து வளர்ப்போருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆழப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங் களில் எச்-5 ஏவியன் இன்புளூ யன்சா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 12 கிராமங்களில் உள்ள பறவைகளை அரசு அலு வலர்கள் அழித்து வருகின்றனர். மத்திய அரசு 2 நபர் குழுவை கேரளத்துக்கு அனுப்பி வைத் துள்ளது. கடந்த 9-ம் தேதி வாத்துகள் இறந்த தகவல் வெளியானது. சரியான சமயத் தில் செயல்பட மாநில அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து