முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி பதவிக்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கேட்கும் அமர்சிங்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபரான அமர்சிங், சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்யாதவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பொது செயலாளராக இருந்த அவர் மேல் – சபை எம்.பி. பதவி வகித்தார்.
பின்னர் முலாயம்சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார். தற்போது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
அமர்சிங் வகித்து வந்த மேல் – சபை எம்.பி.பதவி முடிவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் எம்.பி.யாக முயற்சி செய்துவருகிறார். இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் முலாயம் சிங்யாதவ், முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆனால் சமாஜ்வாடி கட்சி அவருக்கு கைவிரித்துவிட்டது.
சமீபத்தில் உ.பி.யில் நடந்த டெல்லி மேல்–சபை தேர்தலில் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், மாநில மந்திரி அசம்கானின் மனைவி தஸீன் பாத்திமா, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ்சேகர், ரவி பிரகாஷ்வர்மா, ஜாவித் அலிகான், சந்திரபால் யாதவ் ஆகியோர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டனர்.
அமர்சிங், தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் எம்.பி. பதவிக்காக பா.ஜனதா ஆதரவை நாடியுள்ளார். இது தொடர்பாக அவர் பா.ஜனதா மாநில பொறுப்பாளர் ஓம் மாத்தாரைச் சந்தித்துப் பேசினார். பா.ஜனதா அவருக்கு ஆதரவு கொடுக்குமா? அல்லது தனித்து விடப்படுவரா? என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து