முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறவை காய்ச்சல்: கேரளாவில் 1300 வாத்துகள் தீவைத்து அழிப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பறவை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சில வாத்துகள் திடீர் திடீரென செத்து விழுந்தன. இறந்த வாத்துகளின் மாமிசங்களை பரிசோதனை செய்த போது அவற்றுக்கு எச் - 5 ஏவியன் இன்புளூயன்சா வைரஸ் எனப்படும் பறவை காய்ச்சல் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் பரவியதும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கால்நடை துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். நோய் பாதித்த வாத்துகளை உடனே தீவைத்து எரித்து அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்நோயின் தாக்கம் அதிகமாக இருந்த ஆழப்புழா, கோட்டயம், பந்தனம் திட்டம் மாவட்டங்களில் உள்ள வாத்து பண்ணையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த வாத்துகள் ஊருக்கு வெளியே உள்ள பொட்டல் காட்டில் தீவைத்து அழிக்கப்பட்டன.
கோட்டயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகளும், பந்தனம்திட்டாவில் 200, ஆழப்புழாவில் 100 என 1,300 வாத்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் இந்நோய் பரவியிருக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் க ருதுகிறார்கள்.
இதனால் இக்கிராமங்களிலும் கண்காணிப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இது போல கோழிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்றும் அதிகாரிகள் கிராமம் கிராமமாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். பறவை காய்ச்சலால் எரித்து கொல்லப்பட்ட வாத்துகளை வளர்த்த பண்ணையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் நஷ்ட ஈ டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுக்க குமரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமுடு மற்றும் ஆரல்வாய்மொழியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழித்தீவனங்கள் மற்றும் கோழிப்பண்ணை உபகரணங்களை குமரி மாவட்டத்துக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் இ ருந்து வரும் ரயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து டயர்களில் கிருமி நாசினி பொடியை தூவி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து