முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

38 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.ஜெயவர்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் தென்சென்னை பாராளுமன்றத்தொகுதியின் அதிமுக உறுப்பினர் ஜெயவர்தன் பேசியதாவது:
இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்திய அரசு நாப்தால் உரத்தொழிற்சாலையை வாயு அடிப்படையிலான உரத் தொழிற்சாலைக்குமாற்றியிருக்கிறது. அரசு இதனை இவ்வாறு மாற்றியதால் தூத்துகுடியிலுள்ளஸ்பிக் உரத் தொழிற்சாலை மற்றும் சென்னையிலுள்ள மணலி உரத்தொழிற்சாலை இவ்விரண்டு முக்கிய பெரிய அளவிலான உரத்தொழிற்சாலைகள்தற்பொழுதுசெயல்பாட்டில்இல்லை.இதனால்இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கானதொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எங்கள் மக்களின் முதல்வர்ஜெயலலிதா , இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியிருக்கிறார். அரசு விவசாயிகளிடம் உள்ளஉரத் தட்டுபாட்டைப் போக்க விரும்புகையில் தமிழ்நாட்டிலுள்ள உரத்தொழிற்சாலைகள் முறைப்படி செயல்படுத்துவதற்கான வழிவகைகளைகட்டாயமாகச் செய்ய வேண்டும். இந்த உரத் தொழிற்சாலைகளுக்கு தரக்கூடியமானியத்தை நிறுத்தக் கூடாது மற்றும் நாப்தா அடிப்படையிலான உரத்தொழிற்சாலைகளை வாயு அடிப்படையிலான தொழிற்சாலைகளாகமாற்றுவதற்குண்டான உரிய கால அவகாசத்தை மற்றும் உதவியை அளிக்கவேண்டும்.
நவம்பர் 2011 அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவி மீனவர்களானஎமர்சன், அகஸ்டின், வில்சன், பிரசாத் மற்றும் லேங்லெட் ஆகியோர் இலங்கைகடற்படையினரால் போதைப் பொருட்கள் கடத்தியதாக பொய் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மக்கள் முதல்வர் ஆற்றல்மிகுபுரட்சித்தலைவி, நவம்பர் 2011-ல் கைது செய்யப்பட்டமீனவர்களின் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை நியமனம் செய்ததோடு, இரண்டுஇலட்ச ரூபாயையும் வழங்கினார்கள். பின்னர் வழக்கை விரைவுபடுத்தும்பொருட்டு பிப்ரவரி 2013-ல் மூன்று இலட்ச ரூபாயை வழங்கினார். மேலும்,கைது செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண நிதியாகமாதம் ரூ.7,500/- வீதம் வழங்கியதோடு, 2012-ல் அக்குடும்பங்களுக்கு இரண்டுஇலட்சம் ரூபாய் வீதம் வழங்கினார்கள். இது குறித்து பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்
அக்டோபர் 30, 2014அன்று கொழும்பு உயர்நீதி மன்றம்அம்மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைஅறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களின் தண்டனையை ரத்துச்செய்யக்கோரி , தமிழக அரசின் வாயிலாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். தமிழக அரசுவழக்கு செலவிற்கான 20 இலட்சம் ரூபாய் வழங்கியதுடன், மத்திய அரசையும்இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியது. மக்கள் முதல்வர்ஜெயலலிதா எடுத்த தொடர்ச்சியான, போர்க்கால,தன்னலமற்ற முயற்சியினால் அம்மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
அம்மீனவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 3 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. -3-தமிழக மீனவர்கள் மீது அக்கறையுள்ள ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே. இந்த சூழ்நிலையை மற்றஅரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தநினைக்கின்றன. தாயுள்ளம் கொண்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா தமிழகமீனவர்கள் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடுஇணை இல்லை. ஒவ்வொருதமிழக மீனவருக்கும் புரட்சித்தலைவி கடவுளாகவும்,உரிமைகளைப் பாதுகாப்பவராகவும் திகழ்கின்றார்கள். இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிஎன அறிவித்து, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இனியும்காலம் தாமதிக்காமல் இது போன்ற தமிழக மீனவர்களின் மீதானகொடுந்தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து