முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் ஊழல்களை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை - கருணாநிதியின் ஊழல்களை விளக்கி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசும் வளங்கி முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் ஊழல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கருவின் குற்றமே காத்திருக்கு ஸ்பெக்ரமே என்ற தலைப்பில் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் திமுகவினரும் நடத்திய ஊழல்களை அம்லப்படுத்தி துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு மதுரை புறநகர் மாவட்ட அதிமுக மாணவரணியினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் வழங்கி வருகிறார்கள். மதுரை கிழக்கு தொகுதி கருப்பாயூரணியில் இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ம.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவரணியின் சார்பில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், இருசக்கர வாகனயோட்டிகள், பஸ் பயணிகள், நடைபாதசாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் வழங்கி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தனக்கென்று இல்லாமல் தமிழநாட்டிற்காகவும், தமிழ் மக்களாகாகவும் வாழ்ந்து வரும் ஒரே தலைவி மக்களின் முதல்வர் அம்மா ஒருவர் தான். அவரது பொற்கால ஆட்சியினால் தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் படுதோல்வியடைந்தனர்.
கடந்த 37 ஆண்டுகளாக நிலவி வந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு கண்டனர் அம்மா ஒருவர் தான் 5 மாவட்ட மக்களின் ஜீவதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் பிரச்சனையில் நீண்ட நெடிய சட்ட போராட்டத்தினை நடத்தி இன்றைக்கு 142 அடி தண்ணீரை நிறுவதற்கான உச்சநீதிமன்ற ஆணையை பெற்று தந்தவர் அம்மா ஒருவர் தான். இந்த விசயத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சொன்னார்கள் ஆனால், சொன்னபடி செய்து காண்பித்தவர் அம்மா ஒருவர் தான். அதனால், 5 மாவட்ட விவசாயிகளும் சேர்ந்து அவருக்கு மதுரையில் மதுரையில் நன்றிகடனை செலுத்தும் வகையில் மாபெரும் விழா எடுத்தனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக அம்மா பொறுப்பேற்று முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி காட்டுவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா, கிழக்கு தொகு கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் அய்யப்பன், கள்ளந்திரி பி.சேகர், எம்.ஏ.பாலு, ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே.முருகேசன், மாவட்ட பேரவை இணை செயலாளர் அய்யர்பங்களா கருப்பணன், மேலூர் முருகேசன், ஆண்டிப்பட்டி முருகேசன், மாணரணி நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், மணகண்டன், பூமிநாதன், முத்துகிருஷ்ணன், செல்வகுமார், பிரவின்குமார், முனியசாமி, கார்த்திக், சிவா, செல்வம், துரை அண்ணா, எம்.கர்ணன், ராமன், மோகன்குமார், சசிகுமார் மற்றும் திருப்பதி, ரவிபாண்டி, உத்தங்குடி மகேஷ், ஜெ.ஜெ.நகர் பாலு, துதிதிருநாவுகரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து