முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்க் நாடுகளிடையே மின்துறை ஒப்பந்தம் கையெழுத்து

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காட்மண்டு - மின்சாரத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் சார்க் அமைப்பில் உள்ள நாடுகள் கையெழுத்திட்டன.
சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த மின் பகிர்வை மேற்கொள்ளவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. சார்க் மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று 8 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் மின் துறை ஒப்பந்தத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
ஆனால், பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதை தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தான் ஆட்சேபம் தெரிவித்ததே இதற்கு காரணம். இந்த ஒப்பந்தம் நிறைவேற் றப்பட்டிருந்தால், எளிதாகவும் குறைந்த செலவிலும் சார்க் நாடுகளிடையே மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்குகளை அனுப்புவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு மற்ற நாடுகளின் பிரதிநிதிகள், பாகிஸ்தான் தரப்பை வலியுறுத்தினர். ஆனால், அதை ஏற்காத பாகிஸ்தான் தரப்பு, இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தங்கள் நாட்டில் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் நிறைவடையாததை சுட்டிக் காட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து