முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 8 ஆண்டுகளுக்குள் 90 சதவீத வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீர்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - அடுத்த 8 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள 90 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர சிங் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனை வருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு குழாய் இணைப்பு மூலம் போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி அடுத்த 8 ஆண்டுகளில் 90 சதவீத மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.
குடிநீர் வழங்கல் பணி மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே, இதுதொடர்பாக திட்டமிடுதல், திட்டத்துக்கு அனுமதி வழங்கல் மற்றும் அதை செயல்படுத்துதல் ஆகிய பணி கள் மாநில அரசுகள் மூலமே மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து