முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் இன்ஜினீயர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மாயமானார். அன்றைய தினம் பணி முடிந்து இரவு 10.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் பிப்ரவரி 22-ம் தேதி மீட்கப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உடல் கிடந்த இடத்தில் தடயங்களை போலீஸார் சேகரித்தனர். ஆளில்லா விமானம் மூலமும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
பெண் இன்ஜினீயர் காணாமல்போன தினத்தில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவையும் காணவில்லை. அதை வைத்து முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார், உத்தம்(23), ராம் மண்டல்(23) உஜ்ஜல் மண்டல் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள்தான் பெண் இன்ஜினீயரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெண் இன்ஜினீயரை கொலை செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து