முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டில் இந்தியா - ஆஸ்தி., இடையேயான முதல் டெஸ்ட் போட்டி

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் - இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது. ஆனாலும், தேதி இன்னமும் குறிப்பிடப்படவில்லை.

பிலிப் ஹியூஸின் அகால மரணத்தை அடுத்து இந்த கோடைகால கிரிக்கெட் தொடரை எப்படி மறு வடிவமைப்பது என்பது பற்றி இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்தன.

பிரிஸ்பன் டெஸ்ட் வரும் 4ம் தேதி வியாழக்கிழமை தொடங்குவதாக இருந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு டிச.3-ஆம் தேதி நடைபெறுவதையடுத்து பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், 2-வது டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெறலாம் என்று தெரிகிறது. அதாவது அடிலெய்ட் டெஸ்ட் போட்டி முந்தைய அட்டவணையில் டிசம்பர் 12-ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது, முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெறுவதால் டிச.12-ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்பாகவே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியும் உடனடியாகவே நடைபெறும் என்று தெரிகிறது.அதாவது டிச.9-ஆம் தேதி அடிலெய்ட் டெஸ்ட் தொடங்கலாம் என்று ஆஸி. ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல் டிச.17-ல் பிரிஸ்பன் போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், டிச.25-ஆம் தேதி மெல்பர்னில் பாக்சிங் டே டெஸ்ட் எப்படியும் நடைபெற்றேயாக வேண்டும்.எனினும், இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து