முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை உத்தேச அணியில் சேவாக் - யுவராஜ் - கம்பீருக்கு இடமில்லை

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மும்பை - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், மூத்த வீரர்களான யுவராஜ், சேவாக், கம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.
கடந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியில் இருந்த 4 மூத்த வீரர்கள் மட்டுமே உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, பிசிசிஐ தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணி விவரம்:
தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, ரஹானே, உத்தப்பா, விராட் கோலி, ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டே, சாஹா, சஞ்சு சாம்சன், அஸ்வின், பர்வேஸ் ரசூல், கார்ன் சர்மா, அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ஆஷோக் திண்டா, ஸ்டுவர்டு பின்னி, மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முரளி விஜய், தாவல் குல்கர்னி, ஆகியோர் பிசிசிஐ தேர்ந்தெடுத்தவர்கள்.
கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து தோனி, கோலி, அஸ்வின் ரெய்னா ஆகிய நான்கு பேர் மட்டுமே தற்போதுள்ள உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இதேபோல் சேவாக், கடந்த உலகக் கோப்பையில் அசத்தியிருந்தாலும் இப்போது அணியில் இல்லை. மூத்த பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து