முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பக்தர்கள் படிபூஜைக்கு 2030ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொள்ள பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை வரும் பக்தர்கள் அய்யப்பனுக்கு காணிக்கை செலுத்துவதோடு அங்கு நடக்கும் படி பூஜை, உ தயாஸ்தமன பூஜைகளும் செய்வது உண்டு. இதற்காக அவர்கள் கோவில் நடை திறந்திருக்கும் நாட்களில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை செய்ய கோவில் நிர்வாகத்திடம் பணம் கட்டி முன் ப திவு செய்திருக்க வேண்டும். படி பூஜைக்கு ரூ. 40 ஆயிரமும், உதயாஸ்தமன பூஜைக்கு ரூ. 2 5 ஆயிரமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவிலின் இன்றைய நிலவரப்படி சபரிமலையில் பக்தர்கள் படி பூஜை செய்ய வருகிற 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை முன்பதிவு முடிந்து விட்டது. இனி பதிவு செய்பவர்கள் 2020 அக்டோபருக்கு பிறகுதான் படி பூ ஜை செய்ய முடியும். இது போல உதயாஸ்தமன பூஜைக்கு வருகிற 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் அதிகாரிகள் தெரிவித்ததோடு இந்த காலக்கட்டத்தில் படி பூ ஜை மற்றும் உதயாஸ்தமன பூ ஜைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டால் அதற்கான கூடுதல் கட்டணத்தை பக்தர்கள் செலுத்தி படி பூ ஜை நிறைவேற்றி கொள்ளலாம் என கோயில் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்த ஆண்டு மண்டல பூ ஜைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கார்த்திகை தீப விளக்குகள் கோவிலில் ஏற்றப்பட்டன. இதனால் கோவில் சன்னிதானம் தீ ப ஒளியில் ஜொலித்தது. இதை காணவும் 18ம் படி ஏறவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பாபர் மசூதி இடிப்பு நாளான நேற்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நேற்று முன்தினம் காலை முதலே கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கமாண்டோ படை வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் து ப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈ டுபட்டனர். சன்னிதானம் மற்றும் 18ம் படி ஏறும் முன்பு பக்தர்கள் அனைவரும் பல கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கூட்டம் சற்று குறைய தொடங்கியது. நேற்று காலையிலும் அது நீடித்தது. நேற்று பிற்பகலுக்கு மேல் கோயிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து