முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி லட்டு பிரசாதம் தாராளமாக கிடைக்க ஏற்பாடு

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால் தற்போது பக்தர்களின் தரிசன டிக்கெட்டுக்கு தகுந்த வகையில் அதிகபட்சமாக 4 லட்டுகளே வழங்கப்படுகிறது.
திருப்பதி சென்று வரும் பக்தர்களிடம் அவரது உறவினர்களும் நண்பர்களும் கேட்பது எங்கே லட்டு என்ற வகையில் உள்ளது. ஆனால் தேவஸ்தானம் கொடுக்கும் லட்டு அவர்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் கூடுதல் லட்டு பெற இடைத்தரகர்களை நாடுகிறார்கள். இது ஒரு பெரிய குறையாக பக்தர்கள் கருதி வந்தனர். இந்த குறையை போக்க தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது.
திருப்பதி கோயிலில் தினமும் இரண்டரை லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் வார விடுமுறை நாட்களில் மூன்றரை ல ட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. பிரம்மோற்சவ நாட்களில் பக்தர்கள் அதிகளவு கூடுகிறார்கள். அவர்களுக்கு தேவையான லட்டு வழங்க முடியாமல் சில நேரங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. லட்டுக்குரிய பூந்தி கோவிலுக்கு வெளியே தயாரிக்கப்படுகிறது. இவைகள் கன்வேயர் பெல்ட் மூலம் கோவிலுக்குள் இருக்கும் லட்டு தயாரிக்கும் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு சர்க்கரை பாகு, முந்திரி பருப்பு, கற்கண்டு, ஏலக்காய் மற்றும் வாசனை பொருட்கள் கலந்து லட்டு தயாரிக்கப்படுகிறது. இதற்காக தினமும் 200 ஊ ழியர்கள் 3 ஷிப்ட் ஆக வேலை பார்த்த போதிலும் போதிய லட்டு தயாரிக்க முடியவில்லை. பொதுவாக பூந்திகளை சர்க்கரை பாகு மற்றும் வாசனை பொருட்களுடன் கலப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தை தவிர்க்க பூந்திகளை சர்க்கரை பாகு வாசனை பொருட்களுடன் கலக்க நவீன எந்திரம் வாங்க தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த என்ஜீனியரிங் நிறுவனத்துடன் தேவஸ்தான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த எந்திரம் பொருத்துவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் லட்டுவின் தரத்தையும் மேம்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த எந்திரம் பொருத்தப்பட்டால் கூடுதலாக லட்டு தயாரிக்க முடியும். இதனால் ப க்த ர்கள் கேட்கும் லட்டு வழங்க முடியும். இடைத்தரகர்களையும் ஒழிக்க முடியும் என்று தேவஸ்தானம் கருதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து