முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனுமதியின்றி பாடல்கள் விற்பனை: காவல் துறையிடம் இளையராஜா புகார்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தான் இசையமைத்த பாடல்கள் சி.டி.க்களாகவும், இணையதளம் வாயிலாகவும் அனுமதியின்றி விற்பனை செய்யப்படுவதாக இசையமைப்பாளர் இளையராஜா புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மனு சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டது. இது குறித்து இளையராஜா சார்பில் பிரதீப்குமார் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ் திரைப்பட துறையில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக இருந்து வருகிறேன். நான் இசையமைத்த பாடல்களை என்னுடைய அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். இந்நிலையில் சென்னையை சேர்ந்த அகி மியூசிக் பிரைவேட் லிமிடெட், கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி எனது பாடல்களை சி.டி.க்களாகவும், இணையதளம் வாயிலாகவும் விற்பனை செய்து வருகின்றன. இது குறித்து எனது ரசிகர்கள் ஏற்கனவே சென்னை காவல் துறையில் புகார் செய்துள்ளனர். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் சட்ட விரோதமாக பாடல்களை விற்பனை செய்கிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous December 8, 09:28

    No body knows why is he making such fivolous complaints. How to deal with these type of complaints. He has given the rights to the producers of films, distributors at the time of release of films. The songs are played number of times in Radio etc. What is he trying to convey? If he is not interested, let him make public announcement that his songs should not be heard by any public. Then everything would come to an end.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து