முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்: வார்னர் சதத்துடன் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்டு - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது.
டோணி உடல் தகுதியுடன் இல்லாததால் நேற்றைய டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் வீராட்கோஹ்லி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக களம் கண்டார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், ரோஜர்சும் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வருண் ஆரோன், ஷமி பந்தை விளாசினார். ஆனால், இஷாந்த் சர்மா தொடக்க ஜோடியை பிரித்தார். தனது
அடுத்து வாட்சன் களமிறங்கினார். இஷாந்த்சர்மா பவுன்சர்களாக வீசி அவரை அச்சுறுத்தினார். வாட்சன் 14 ரன்னில் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். 3வது விக்கெட்டுக்கு வார்னருடன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். இந்தியாவுக்கு எதிராக 2வது சதத்தை பதிவு செய்தார். இதேபோல் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 69 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார்.
இதனிடையே கிளார்க் 60 ரன்களில் முதுகு வலி காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். 145 ரன்கள் குவித்த வார்னரை கரண் சர்மா வீழ்த்தினார். இறுதி நேரத்தில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா இன்றைய ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்களை எடுத்தது.
ஆரோன் மற்றும் ஷமி இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாளில் கடைசி ஓவரில் ஆஸி.விக்கெட் கீப்பர் ஹேடின் விக்கெட்டை ஷமி வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்திய அணி விவரம்: விராட்கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், புஜாரா, ரோகித்சர்மா, ரகானே, விர்த்திமான் சாகா, கரண்சர்மா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து