முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல். ஸ்பாட் பிக்சிங்: டெல்லி போலீஸ் மீது நீதிபதி பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் மீதான வாதங்களைத் தொடங்க வேண்டிய டெல்லி போலீஸ் விசாரணையத் தள்ளிவைக்கக் கோரியதால் நீதிபதி கடும் கோபமடைந்தார்.
கடந்த 6 மாதங்களாக இந்த நாடகம் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறை ஒன்றுமே செய்யவில்லை. குற்றச்சாட்டுப் பதிவுகள் மீதான வாதங்களைத் தொடங்க தேதி குறிக்கப்பட்ட பின்பு மேலும் நீட்டிப்பு கேட்கிறீர்கள்” என்று கூடுதல் அமர்வு நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். இப்படியே தள்ளிவைக்கக் கோரினால் காலநேரம் குறிக்காமல் தினமும் விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று அவர் மேலும் எச்சரித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "எனக்கு கால அவகாசம் தேவை. அனைத்து கோப்புகளையும் படித்த பிறகு நான் எழுத்துபூர்வமாக எனது வாதங்களை அளிக்க முடியும். எனவே கடைசி முறையாக நான் அவகாசம் கேட்கிறேன்” என்றார்.
அரசுதரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதையடுத்து, டெல்லி காவல்துறையின் சிறப்பு செல்லின் மீது நீதிபதியின் கவனம் திரும்பியது: “உங்களது விசாரணை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? செப்டம்பர் மாதம் முதல் தள்ளிவைப்பு கோரி வருகிறீர்கள், நான் வெறுமனே தேதிகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் தினமும் விசாரணை நடத்துவதை தவிர வேறுவழியில்லை. நான் எந்த நிர்ணயமான காலத்தையும் அளிக்க மாட்டேன். தினமும் காலை 10 மணிக்கு இங்கு வாருங்கள், மாலை 4 மணி வரை நின்று கொண்டிருங்கள். எனக்கு கால அவகாசம் கிடைக்கும் போது நான் வாதங்களை கேட்கிறேன்” என்று நீதிபதி கடுங்கோபத்துடன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து