முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்டாக்சியில் பாதுகாப்பாக பயண செய்ய அழைப்பு

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - என்.டி.எல் கால்டாக்சிகளில் பயணிகள் எந்தவிதமான அச்சமும் இன்றி பாதுகாப்புடன் பயணம் செய்யலாம் என்று அதன் இயக்குனர் பரத்குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த கால்டாக்சி சம்பவம் பயணிகளிடையே கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் என்.டி.எல். கால்டாக்சி நிறுவனத்தின் இயக்குனர் பரத்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது.,
சென்னையில் கிட்டதட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.டி.எல் கால்டாக்சிகள் ஒடுகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக எங்களுடைய கால்டாக்சியில் மட்டுமே ஜிபிஎஸ் கருவிகள் உள்ளன. எங்களது கட்டுப்பாட்டு அறையில் எந்த கால்டாக்சி எங்கு ஒடுகிறது. டிரைவர்கள் மற்றும் பயணிகள் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். டிரைவர்களை பொறுத்தவரை அவர்களின் நடத்தையை தீவிரமாக சோதித்த பின்னரே சேர்க்கிறோம். இதுவரை குற்றவியல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்களா என்பதை காவல்துறை மூலம் ஆராய்கிறோம். வாராவாரம் அவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்குகிறோம். எனவே எங்கள் கால்டாக்சியில் பயணிகள் எந்த விதமான பயமும் இன்றி பாதுகாப்புடன் பயணம் செய்யலாம் என்று அவர் கூறினார். பேட்டியின்போது ஒய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் மனோகர் சுந்தர்தாஸ் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து