முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோனோ ரெயில் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முறையான அறிவிப்பை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் செயல்படுத்துவதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. தகுதியான 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் மோனோ ரெயில் செயல்படுத்துவதற்கான அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோ ரெயில் சென்னையில் செயல்படுத்துவதற்கான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து