முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச மனித உரிமை தினம்: கவர்னர் ரோசய்யா வாழ்த்து

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி தமிழ்நாடு கவர்னர் கே.ரோசய்யா விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘‘சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடும் இத்தருணத்தில் தமிழ்நாடு மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பண்பாட்டின் பிறப்பிடமாக மனித உரிமைகள் திகழ்கிறது. இது அனைவரின் இணக்கமாக வாழ்வதற்கான வாழ்க்கை, சுதந்திரம், பெருந்தன்மை, நீதி மற்றும் அமைதியை உறுதிப்படுத்துகிறது.
56 ஆண்டுகளுக்கு முன்பு 1948–ம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினம் அறிவிக்கப்பட்டது. அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டில் மனித உரிமைகளை பாதுகாத்து உறுதிப்படுத்தும் முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. கடந்த 1997 ஏப்ரல் முதல் 2014–ம் ஆண்டு மார்ச் வரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 873 மனித உரிமை மீறல் வழக்குகள் மாநில மனித உரிமைகள் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 374 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 6,499 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாம் மிகப்பெரிய நாட்டின் குடிமகனாக திகழ்கிறோம். மனித உரிமையை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அமைப்புகளும், மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பார்கள் என நான் கருதுகிறேன். இந்த சர்வதேச மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் அமைதி, ஒற்றுமை மற்றும் இணக்கமான நிலையை உருவாக்குவோம்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து