முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியின் 65 வது பிறந்த நாள் விழா: மதுரை கோவில்களில் இன்று வழிபாடு

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

மதுரை - திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை ரஜினி மன்றத்தினர் நடத்தி அன்னதானம் வழங்குகிறார்கள்.
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள் விழா இன்று 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மதுரையில் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் கோவில்களில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம், ரத்ததானமும் வழங்கி ரஜினியின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள்.
இது குறித்து மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் எஸ்.எம். ரபீக், ஏ. பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைமை மன்றத்தின் சார்பில் மதுரையில் உள்ள கோவில்கள்,பள்ளிவாசல், தேவாலயங்களில் விசேஷ பூஜை மற்றும் வேட்டி, சேலை, நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. மதுரை நகரில் பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் சுரேஷ் தலைமையில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. கீரைத்துறையில் தங்கவேல் தலைமையில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது. தாளமுத்து, வெள்ளைசாமி, பில்லா கார்த்திக், மனோ பாட்சா தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், வேட்டி, சேலைகளும் வழங்கப்படுகிறது. வாசன் கண் மருத்துவமனை, பல் மருத்துவமனையுடன் இணைந்து தாடி செல்வம் தலைமையில் இலவச கண் சிகிச்சை, பல் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பைக்காரா முதியோர் காப்பகம், ஆரப்பாளையம் பிள்ளையார் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மையத்தில் விருமாண்டி தலைமையில் அறுசுவையுடன் கூடிய பிரியாணி வழங்கப்படுகிறது. சோழவந்தான் பகுதியில் கண்ணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதே போல் மதுரை நகரில் வார்டுகள் வாரியாக இலவச வேட்டி, சேலைகள், அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.எம். ரபீக், ஏ. பாண்டியன், வழக்கறிஞர் சிங்கராசு, பாலதம்புராஜ், சேகர், மணவாளன், துரை, ஆர்.எம். மெய்யப்பன், அழகர், பழனிபாட்சா, விஜயபாஸ்கர், மகேஷ்பாபு, சுரேஷ், நாகேஸ்வரன், காமாட்சி, தீபன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் பாலதம்புராஜ், வி.கே.ஆர். சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை மாநகர் மாவட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், பெரியார் பஸ் நிலையம் ஆர்.எம்.எஸ். சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் நடக்கிறது. ஏழை பெண்களுக்கு இலவச சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகிறது. கோ. புதூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. திடீர்நகர், பெரியார் பஸ் நிலையம், மேலவாசல், விளாச்சேரி, பேச்சியம்மன் படித்துறை, நகைக்கடை பஜார், எல்லீஸ் நகர் உள்ளிட்ட இடங்களில் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் கண்ணா, புதூர் காளிமுத்து, முருகன், சந்திரன், பஞ்சு, கண்ணன், ஆத்திகுளம் ஜெகன், பர்மா முருகன், மேலவாசல் வைரம், வாடிப்பட்டி முருகதாஸ், எல்லீஸ் நகர் கண்ணன், நாகராஜ், பாண்டிகுமார், ரஜினிகணேசன், வேலு, அபுதாகீர், பாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். ரஜினியின் பிறந்த நாளான இன்று லிங்கா திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்த நாள் விழா மக்கள் பயன்படும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து