முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிங்கா படத்தை வெளியிட ஐகோர்ட்டு கிளை நிபந்தனை

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

மதுரை - ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை வெளியிட ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்‌ஷி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'லிங்கா' திரைப்படம் ரஜினி பிறந்த நாளான இன்று வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருக்கிறார். ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் கதை தன்னுடையது என்று ரவிரத்னம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ரவிரத்னம் தரப்பில், 'லிங்கா' கதை தன்னுடையது என்று வாதாடப்பட்டது.
இதையடுத்து, ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்திவிட்டு, படத்தை வெளியிடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில், வைப்புத் தொகை அதிகம் என்ற தயாரிப்பாளர் தரப்பு வாதத்தை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ரூ.5 கோடி ரொக்கமும், ரூ.5 கோடி வங்கி உத்தரவாதமும் அளித்த பின்னர் படத்தை வெளியிடலாம் என்று 'லிங்கா' தயாரிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் வெங்கடேஷ் கூறும்போது, "நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். பட வெளியீட்டில் எந்தவித தாமதமும் இருக்காது. திட்டமிட்டப்படி 'லிங்கா' வெளியாகும்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து