முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும் - பட்டாசு வெடித்தும் ஆராவாரம்

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி உள்ள லிங்கா படம் ஓடும் திரையரங்குகள் விழாக்கோலம் கொண்டுள்ளன. அங்குள்ள ரஜினியின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், ஆராவாரம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 64-வது பிறந்தநாளான நேற்று லிங்கா வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் லிங்கா திரைப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி சில திரையரங்குகளில் நேற்றுமுன் தீனம் இரவு 1 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது.
சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் நேற்றிரவு 1 மணி காட்சிக்கு ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் தலைவா... என கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரஜினியின் கட்அவுட்டிற்கு மாலையணிவித்து பாலாபிஷேகம் செய்து கற்பூரமும் காட்டி வணங்கினர். திரையரங்கு முன்பு தொடர்ச்சியாக பட்டாசுவெடித்துக் கொண்டே இருந்தனர்.
திரையரங்கில் லிங்கா படம் திரையிடப்பட்டதும், சூப்பர்ஸ்டார் என தலைப்பு வந்த போது ரசிகர்களின் விசில் சத்தத்தில் திரையரங்கமே அதிர்ந்தது. பேப்பர்களை கிழித்து வீசி உற்சாகத்தில் திளைத்தனர். அதனை தொடர்ந்து இன்று காலையும் காசி தியேட்டர், ஆல்பர்ட் தியேட்டர், போரூர் கோபாலகிருஷ்ணா, உதயம், சத்யம், ஏஜிஎஸ், பிருந்தா, பாரத், மகாராணி என சென்னை முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லிங்கா படத்தை காண ரசிகர்கள் உற்சாகமாக திரண்டு வந்திருந்தனர்.
ரஜினியின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர் மன்றம் சார்பில் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது.
ரஜினி ரசிகர் மன்றம் தி.நகர் பகுதி சார்பில் பேப்பர் க.சீனு தலைமையில் தி.நகர் வெங்கட்நாராயணா
சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நேற்று காலை 8.30 மணி அளவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் பக்தர்கள் 500 பேர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சென்னை மாவட்ட தலைவர் என்.ராமதாஸ், நிர்வாகிகள் ஆர்.சூர்யா, கே.ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பூஜை முடிந்த பின்னர் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போயஸ் கார்டன் சென்றனர். அங்கு அவரது இல்லம் முன்பு ரசிகர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இருப்பினும் ரஜினிகாந்த் வெளியூர் சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவரது மனைவி லதாவிடம் பிரசாதத்தை வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து