முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசுவத்தி - ஊதுவத்திகளில் புற்றுநோய் வரும் அபாயம்

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மைசூர் - கொசுவத்தி, ஊதுவத்திகளில் இருந்து வரும் புகையை நுகர்வதால் நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை கேன்சர் நோய் வரக்கூட வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார் புனேவின் செஸ்ட் ரிசேர்ச் பவுண்டேஷன் இயக்குநர் சால்வி.
தேசிய அளவிளான கருத்தரங்கு ஒன்றில் பேசிய சால்வி, "பூட்டிய அறையில் ஒரே ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில்: "பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊதுவத்தியிலிருந்து வெளியேறும் புகையில் லெட், அயர்ன், மேன்கனீஸ் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன. இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்தியில் பைரத்திரின் (pyrethrin) என்ற பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது. இவை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
புகை குறைவாக வெளியிடும் கொசுவத்திகள் என விளம்பரப்படுத்தப்படும் பொருட்களில் நச்சுத்தன்மையின் அளவு சற்று குறைவாக இருக்கும். இருப்பினும் அத்தகைய பொருட்கள் வெளியிடும் கார்பன் மோனோ ஆக்ஸைடு அளவு அதிகமாகவே இருக்கும்.
லிகுவிடேட்டர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் மீதான ஆய்வுகள் இன்னும் நிறைவு பெறவில்லை. இருந்தாலும், அவையும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
புனேவை சுற்றியுள்ள 22 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், பல குடும்பத்தினர் கொசுவத்தி, ஊதுவத்தி பயன்பாட்டின்போது வீடுகளின் கதவு, ஜன்னல்களை மூடிவைப்பது தெரியவந்துள்ளது. இது, புகையால் அவர்களை அதிகமாக பாதிக்கிறது" என்றார்.
கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசுவலைகளை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழி என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நச்சுப் பொருட்கள் அடங்கிய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை பொது நலன் கருதி தடை விதிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து