முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ஆதார் அட்டை இருந்தால்தான் வாகனங்களுக்கு பெட்ரோல்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

நகரி - ஆந்திராவில் உள்ள 13 மாவட்டத்தில் 72 லட்சம் வாகனங்கள் உள்ளது. 42 லட்சம் பேர் டிரைவிங் லைசென்ஸ் வைத்து உள்ளனர்.
வாகன லைசென்ஸ் மற்றும் புதிய புத்தக எண்ணை ஆதார் எண்ணுடன் சேர்க்க ஆந்திர அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது. ஆனால் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து வாகன ஓட்டிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது.
இதற்காக முதல் கட்டமாக முக்கியமான பெட்ரோல் விற்பனை நிலையங்களை ஆந்திர போக்குவரத்து துறையினர் தனி கவுண்டர்களை திறந்து உள்ளது. இங்கு பெட்ரோல், டீசல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை எண், ஓட்டுனர் உரிம எம் ஆகியவற்றை அளித்தால் தான் தேவையான பெட்ரோல் டீசல் வழங்கப்படும்.
டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்க ப்படும் பட்சத்தில் வாகன திருட்டுகள் தடுக்கப்படும் என்றும் விபத்து ஏற்பட்டால் அவர்களை பற்றிய முழு விவரம் உடனடியாக தெரிய வரும் என்றும் ஆந்திர போக்குவரத்து துறை மந்திரி ராகவராவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து