முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்ட ஏகாதசி: பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - திருமலையில் வைகுண்ட ஏகாதசி அன்று பரிந்துரைக் கடிதங்களுக்கு அனுமதிரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியன்றே, புத்தாண்டும் வருவதால் அன்றைய தினம் திருமலை ஏழுமலையானை தரிசிக்க சாதாரண பக்தர்களுடன் விஐபிக்களும் திருமலைக்கு அதிக அளவில் வருவர். இதற்காக தேவஸ்தானம் கடந்த ஒரு மாதமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலலையில், தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்ட முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய இரண்டு உற்சவங்களும் ஒரே நாளில் வருவதால், அன்றைய தினம் திருமலைக்கு வரும் விஐபிக்களுடன், 3 பேர் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பரிந்துரைக் கடிதங்களுக்கு அன்றைய தினமும், மறுநாளும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தர்மதரிசனத்தில் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், புதிய செயல் அதிகாரி சாம்ப சிவராவ் பதவியேற்கும் வரை இந்த நடைமுறையில் மாற்றம் ஏதுமில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து