முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., மக்களவை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 100% வருகை பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - மக்கள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி நடந்து பாராளுமன்ற மக்களை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள் தவறாமல் சென்று 100 சதவீத வருகை பதிவு செய்துள்ளனர். விவாதத்தின்போது கேள்விகள் கேட்பதிலும் அ.தி.மு.க., எம்.பி.க்கள் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் மக்கள் கூட்டணியே அ.தி.மு.க. கூட்டணி என்ற கொள்கையுடன் அ.தி.மு.க.வை தனித்து போட்டியிட செய்தார். தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து மக்களை சந்தித்தார். பிரசாரத்தின்போது தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களையும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் கருணாநிதி செய்த துரோரக்தையும் எடுத்துரைத்தார். தம்முடைய செயல் திட்டங்களையும் நீண்டநோக்கு பார்வை கொண்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தார். மக்கள் முதல்வர் ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் கூடி தங்களுடை ஆதரவை தெரிவித்தனர். அதை உறுதி செய்யும் வகையில் அ.தி.மு.க.வை தேர்தலில் மக்கள் அமோக வெற்றிபெற செய்தனர். மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றிபெற்றது. பாராளுமன்றத்தில் 3-வது தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க.வை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். வெற்றிபெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 37 பேரும் மக்களவையில் எப்படி செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளை எந்தவிதத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு வழிகாட்டுதலை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவைக்கு சென்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த பாராளுமன்ற மக்களவை கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டனர். முல்லைப்பெரியாறு அணை,மீனவர்கள் பிரச்சினைகள் உள்பட அனைத்து பிரச்சினைகள் பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டர். இதனால் பாராளுமன்ற வருகை பதிவேட்டில் அ.தி.மு.,க. உறுப்பினர்கள் 100 சதவீத பதிவை செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை மக்களை பதிவேட்டில் இருந்து எடுத்து ஒரு தொண்டு நிறுவனம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 37 உறுப்பினர்கள் பெரும்பாலான நாட்கள் சபைக்கு சென்றுள்ளனர். 37 பேரில் 25 எம்.பி.க்கள் 100 சதவீதம் வரை சபைக்கு சென்று வருகை பதிவேட்டில் பதிவை ஏற்படுத்தியுள்ளனர். அதேமாதிரி விவாதங்களில் கலந்துகொண்டபோது கேள்விகள் கேட்பதிலும் அ.தி.மு.க. வே முன்னிலை வகித்துள்ளது. வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் வெங்கடேஷ் பாபு 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி சாதனை ஏற்படுத்தியுள்ளார். மாநிலங்களவையிலும் அ.தி.ம..க. உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொண்டு மக்கள் பிரச்சினைகளை எடுத்துவைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து