முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா கூட்டணியில் நீடிக்க விஜயகாந்த் நிபந்தனை

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நிதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நட்சத்திர பிரசாரகாராக சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா கூட்டணியில் ஆதரவு திரட்டினார்.
தமிழக கூட்டணி தலைவர்களில் பிரதமர் மோடியுடன் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற தலைவர்கள் தனித்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காததால் தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதாக கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறியது.
இதற்கிடையே ஒரு மாத காலம் வெளிநாடு சென்று திரும்பிய விஜயகாந்த் வருகிற 7–ந் தேதி கோவையில் தே.மு.தி.க. செயற்குழு பொதுக் கூட்டத்தை கூட்டியுள்ளார். கூட்டத்தில் சட்ட சபை தேர்தலை சந்திப்பது, கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வைகோவைத் தொடர்ந்து விஜயகாந்த்தும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று பேசப்படுகிறது.
இதுபற்றி தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, எங்கள் தலைவர் விஜயகாந்த், பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் இணக்கான நட்புடன் உள்ளார். சமீபத்தில் தமிழக மீனவர்கள் 5 பேரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
என்றாலும் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்க வேண்டுமானால் விஜயகாந்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவரை முதல்–அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தனர்.
ஆனால், தே.மு.தி.க.வில் மற்றொரு தரப்பினர் பா.ஜனதா செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியை விஜயகாந்த் பிரதமர் மோடியை சந்தித்து கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இது போன்று பல விஷயங்களில் பா.ஜனதா மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், தே.மு.தி.க. எம்.எல்.ஏ, ஒருவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தும், பிரேமலதாவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மோடியை முன்னிலைப்படுத்திதான் பிரசாரம் செய்தனர்.
மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தில் விஜயகாந்த் கவுரவிக்கப்பட்டார். ஆனால், அதன்பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
ஆனால், பா.ஜனதாவோ தமிழகத்தில் மற்ற கட்சிகள் ஆதரவு இல்லாமல் தனித்து சொந்தக்காலில் நிற்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆண்டாலும் தமிழகத்தில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து வந்ததால் தான் இப்போது அந்த கட்சியால் சொந்தக்காலில் நிற்க முடியாமல் போனது.
அதுபோன்ற நிலை பா.ஜனதாவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்றும், எனவே கூட்டணிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சியை தனித்து நிற்கும் அளவுக்கு வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதனால்தான் அது கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து