முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை-சென்னை இடையே வாராந்திர புதிய ரெயில் அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
லோக்மான்ய திலக்-சென்டிரல் இடையே வாராந்திர புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ரெயில்களின் விவரம் வருமாறு:-
லோக்மான்ய திலக் டெர்மினஸ் (மும்பை)- சென்னை சென்டிரல் இடையே திங்கட்கிழமை தோறும் வாராந்திர ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.11073), லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.05 மணிக்கு சென்டிரல் வந்து சேரும்.
அதேபோல், மறுமார்க்கமாக செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படும் சென்டிரல்-லோக்மான்ய திலக் டெர்மினஸ் வாராந்திர ரெயில் (வ.எண்.11074), சென்டிரலில் இருந்து 16-ந்தேதி பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸை சென்றடையும்.
.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து