முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் கோயிலில் மார்கழியில் நடைதிறப்பு நேரங்கள் மாற்றம்

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செந்தூர் - திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழ் மாதமான மார்கழி வருகின்ற டிசம்பர் 16-ல் தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 14-ல் நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 - 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7.00 மணிக்குள் இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.
முக்கிய விழா நாட்களான ஜனவரி 1-ம் தேதி வியாழக்கிழமை ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 5-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 15-ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து